வியாழன், 15 நவம்பர், 2012

திங்கள், 12 நவம்பர், 2012



          யாரையும் அதிகம் நேசிக்காதே!
    
         அவர்கள் நம்மிடம் பேசாத ஒவ்வொரு 

         நிமிடமும்
     
        நரகமாக மாறிவிடும்.............

சனி, 10 நவம்பர், 2012


உங்களுக்கு இருக்கும்  ஏதேனும் ஒரு கவலையைப் போக்க நீங்கள் ஏன் முயற்சித்துப் பார்க்கக்கூடாது?

 கீழ்க்கண்ட கேள்விகளுக்கான விடைகளை அவற்றின் கீழே கொடுக்கப்பட்டுள்ள வெற்றிடத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.

 1)நான் எதைப் பற்றிக்        கவலைப்படுகிறேன்?








 2)அது குறித்து என்னால் என்ன செய்ய முடியும்?







 3)அது குறித்து நான் இந்த நடவடிக்கைகளைத்தான் எடுக்கப்போகிறேன்.







 4)அதை நான் எப்போது செய்யத் துவங்கப் போகிறேன்?

வெள்ளி, 9 நவம்பர், 2012


கவலையைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மை.

  அன்றைய தினத்தைச் சிறப்பாக வாழுங்கள்,
  
  எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்,

  இரவு படுக்கப் போகும்வரை ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக வாழுங்கள்.

 வில்லிஸ் கேரியர் கூற்று:

  1) "மிக மோசமாக அப்படியென்ன நிகழ்ந்துவிடும்?" என்று உங்களை நீங்களே கேட்டுக்     கொள்ளுங்கள்.

 2)தேவைப்பட்டால் அதை ஏற்றுக் கொள்வதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்க்ள்.

 3)பிறகு அந்த மோசமான சூழ்நிலையை மேம்படுத்த அமைதியாக முயற்சி செய்யுங்கள்.

வியாழன், 11 அக்டோபர், 2012

உலகத்திலேயே மாறாத உன்மையான அன்பு ஒன்று உண்டு என்றால் அது இயேசுவின் அன்பு மட்டுமே.... அதை நிரூபித்தும் காட்டினார். எனவே உண்மையான அன்புக்காக ஏங்கும் யாராக இருந்தாலும் இதை சிந்தியுங்கள்........ தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.{சிலுவையில் நம் பாவத்திற்க்காக மரித்து தம் உண்மையான அன்பை வெளிப்படுத்தினார்}

சனி, 29 செப்டம்பர், 2012


                                                       சபாஷ் சாய்னா!
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களின் சிறப்பான செயல்பாட்டுக்காக பரிசுத் தொகை பெறுவது சாதாரண விஷயம். ஆனால் ஒரு வீரர் இன்னொரு வீரருக்கு பரிசளிப்பது அசாதாரணம். அதைச் செய்து சபாஷ் பெற்றிருக்கிறார், சாய்னா நெவால். பாராஒலிம்பிக் போட்டியில் வென்ற ஒரே இந்திய வீரரான கிரிஜா நாகராஜ கவுடாவுக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து 2லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார் சாய்னா. ஒரு தொழிலாளியின்  வலியை சக தொழிலாளிதான் அறிவார் என்பதைப் போல, ஒரு விளையாட்டு வீரரின் வலி சக வீரருக்கே தெரியும் என்று கூறும் வகையில் பேசுகிறார் சாய்னா. "எங்களுக்கு வலி ஏற்பட்டாலே இயல்பாக ஆட முடியாது. ஆனால் கிரிஜாவோ உடல் குறைவுடன் இவ்வளவு உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். இங்கே பணத்துக்கு அர்த்தமில்லை. விளையாட்டின் மீதுள்ள நேசத்தால்தான் நான் இந்தத் தொகையைக் கொடுத்திருக்கிறேன்" என்று நெகிழ்ந்து, உணர்ந்து பேசுகிறார் சாய்னா நெவால்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012


நம்முடைய மீறுதல்களினிமித்தம்  அவர் (இயேசு) காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம்  அவர் (இயேசு) நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை (இயேசு) அவர்மேல் வந்தது;  அவருடைய (இயேசுவின்) தழும்புகளால் குணமாகிறோம்.

வியாழன், 27 செப்டம்பர், 2012




பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.

புதன், 26 செப்டம்பர், 2012




நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் (இயேசு)  உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
1 யோவான் 1:7-10 (1 John 1:7-10)

அவர் (இயேசு) ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

சனி, 15 செப்டம்பர், 2012



1000 ஸ்தோத்திரம் 1 -100



பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
1. அப்பா பிதாவே ஸ்தோத்திரம்
2. அன்பான பிதாவே ஸ்தோத்திரம்
3. நித்திய பிதாவே ஸ்தோத்திரம்
4. பரலோக பிதாவே ஸ்தோத்திரம்
5. ஆவிகளின் பிதாவே ஸ்தோத்திரம்
6. ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரம்
7. இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம்
8. மகிமையின் பிதாவே ஸ்தோத்திரம்
9. என்னை உண்டாக்கின பிதாவே ஸ்தோத்திரம்
10. என்னை ஆட்கொண்ட பிதாவே ஸ்தோத்திரம்
11. என்னை நிலைப்படுத்தின பிதாவே ஸ்தோத்திரம்
12. என் (எங்கள்) பிதாவே ஸ்தோத்திரம்
13. எம் எல்லாருக்கும் ஒரே பிதாவே ஸ்தோத்திரம்
14. இயேசு கிறிஸ்துவின் பிதாவே ஸ்தோத்திரம்
15. நீதியுள்ள பிதாவே ஸ்தோத்திரம்
16. அந்தரங்கத்திலிருக்கும் பிதாவே ஸ்தோத்திரம்
17. நீதிமான்களின் பிதாவே ஸ்தோத்திரம்
18. இஸ்ரவேலுக்குப் பிதாவே ஸ்தோத்திரம்
19. ஜீவனுள்ள பிதாவே ஸ்தோத்திரம்
தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்
20. உன்னதமான தேவனே ஸ்தோத்திரம்
21. மகா தேவனே ஸ்தோத்திரம்
22. தேவாதி தேவனே ஸ்தோத்திரம்
23. ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம்
24. அன்பின் தேவனே ஸ்தோத்திரம்
25. அநாதி தேவனே ஸ்தோத்திரம்
26. ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்
27. மகிமையின் தேவனே ஸ்தோத்திரம்
28. கிருபையின் தேவனே ஸ்தோத்திரம்
29. ஆபிரகாமின் தேவனே ஸ்தோத்திரம்
30. ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்
31. யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம்
32. யெஷீரனின் தேவனே ஸ்தோத்திரம்
33. இஸ்ரவேலின் தேவனே ஸ்தோத்திரம்
34. எலியாவின் தேவனே ஸ்தோத்திரம்
35. தாவீதின் தேவனே ஸ்தோத்திரம்
36. தானியேலின் தேவனே ஸ்தோத்திரம்
37. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் தேவனே ஸ்தோத்திரம்
38. பிதாவாகிய தேவனே ஸ்தோத்திரம்
39. முற்பிதாக்களின் தேவனே ஸ்தோத்திரம்
40. என் தகப்பனுடைய தேவனே ஸ்தோத்திரம்
41. சர்வ பூமியின் தேவனே ஸ்தோத்திரம்
42. பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனே ஸ்தோத்திரம்
43. பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனே ஸ்தோத்திரம்
44. பூமியின் எல்லை வரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிற தேவனே ஸ்தோத்திரம்
45. அற்பதங்களின் தேவனே ஸ்தோத்திரம்
46. வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம்
47. சர்வ வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம்
48. சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிற தேவனே ஸ்தோத்திரம்
49. மெய்யான தேவனே ஸ்தோத்திரம்
50. ஒன்றான மெய் தேவனே ஸ்தோத்திரம்
51. பிதாவாகிய ஒரே தேவனே ஸ்தோத்திரம்
52. ஒருவராய் ஞானமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
53. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே ஸ்தோத்திரம்
54. பாலோகத்தின் தேவனே ஸ்தோத்திரம்
55. பரிசுத்தமான தேவனே ஸ்தோத்திரம்
56. சத்திய தேவனே ஸ்தோத்திரம்
57. இரட்சிப்பின் தேவனே ஸ்தோத்திரம்
58. வாக்குத்தத்தங்களின் தேவனே ஸ்தோத்திரம்
59. உடன்படிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்
60. நம்பிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்
61. இரக்கமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
62. இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
63. நீதியின் தேவனே ஸ்தோத்திரம்
64. நீதியை சரிக்கட்டும் தேவனே ஸ்தோத்திரம்
65. நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
66. சேனைகளின் தேவனே ஸ்தோத்திரம்
67. என் தேவனே! என் தேவனே! ஸ்தோத்திரம்
68. என்னைப் பெற்ற தேவனே ஸ்தோத்திரம்
69. என்னைக் காண்கிற தேவனே ஸ்தோத்திரம்
70. தரிசனமாகிற தேவனே ஸ்தோத்திரம்
71. மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே ஸ்தோத்திரம்
72. என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனே ஸ்தோத்திரம்
73. மறைபொருளை வெளிப்படுத்தும் தேவனே ஸ்தோத்திரம்
74. தேவர்களுக்கு தேவனே ஸ்தோத்திரம்
75. ராஜாவாகிய என் தேவனே ஸ்தோத்திரம்
76. பெரிய தேவனே ஸ்தோத்திரம்
77. ஐசுவரியத்தின தேவனே ஸ்தோத்திரம்
78. குறைவுகளை நிறைவாக்கும் தேவனே ஸ்தோத்திரம்
79. விளையச் செய்கிற தேவனே ஸ்தோத்திரம்
80. ஜெயங்கொடுக்கிற தேவனே ஸ்தோத்திரம்
81. சமாதானத்தின் தேவனே ஸ்தோத்திரம்
82. பாவியின் மேல் சினங் கொள்ளுகிற தேவனே ஸ்தோத்திரம்
83. எரிச்சலின் தேவனே ஸ்தோத்திரம்
84. மன்னிக்கிற தேவனே ஸ்தோத்திரம்
85. அதிசயங்களைச் செய்கிற தேவனே ஸ்தோத்திரம்
86. இரட்சகராகிய தேவனே ஸ்தோத்திரம்
87. என் முகத்துக்கு இரட்சிப்பாயிருக்கிற தேவனே ஸ்தோத்திரம்
88. எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கும் தேவனே ஸ்தோத்திரம்
89. பெயர் சொல்லி அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
90. இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
91. பொய்யுரையாத தேவனே ஸ்தோத்திரம்
92. தம்மை மறைத்துக் கொண்டிருக்கும் தேவனே ஸ்தோத்திரம்
93. எம்மை பிரகாசிப்பிக்கிற தேவனே ஸ்தோத்திரம்
94. பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவனே ஸ்தோத்திரம்
95. தலைமுறை தலைமுறையாய் ராஜரீகம் பண்ணும் தேவனே ஸ்தோத்திரம்
96. தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பம் தேவனே ஸ்தோத்திரம்
97. சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு நல்லவராகவே இருக்கிற தேவனே ஸ்தோத்திரம்
98. சமீபத்திற்கும் தூரத்திற்கும் தேவனே ஸ்தோத்திரம்
99. கர்த்தாதி கர்த்தரே ஸ்தோத்திரம்
100. கர்த்தராகிய ஆண்டவரே ஸ்தோத்திரம்

புதன், 12 செப்டம்பர், 2012






மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே 


மேன்மைபாராட்டக்கடவன். தன்னைத்தான் 


புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் 


புகழப்படுகிறவனே உத்தமன்

புதன், 5 செப்டம்பர், 2012


மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?








செவ்வாய், 4 செப்டம்பர், 2012

தொடக்கநூல் (ஆதியாகமம்)

அதிகாரம் 12
 
ஆபிராமின் அழைப்பு
1 ஆண்டவர் ஆபிராமை நோக்கி, ″உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். 2உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். 3 உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்″ என்றார். 4 ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து. 5 ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரனின் மகன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர். 6 ஆபிரகாம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர். 7 ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி, ″உன் வழிமரபினர்ககு இந்நாட்டைக் கொடுப்பேன்″ என்றார். ஆகவே தமக்குத் தோன்றிய ஆண்டவருக்கு அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பினார். 8 ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார். 9 இவ்வாறு ஆபிராம் படிப்படியாக நெகேபு நோக்கிப் பயணம் செய்தார். 

எகிப்தில் ஆபிராம்
10 அப்பொழுது அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் தாம் தங்கி வாழ்வதற்கு எகிப்து நாட்டிற்குச் சென்றார். 11 அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், ″நீ கண்ணுக்கு அழகானவள் என்பது எனக்குத் தெரியும். 12எகிப்தியர் உன்னைக் காணும்பொழுது 'இவள் அவனுடைய மனைவி' எனச்சொல்லி என்னைக் கொன்று விடுவர்; உன்னையோ உயிரோடு விட்டுவிடுவர். 13 உன் பொருட்டு எனக்கு நல்லது நடக்கவும் உன்னால் என் உயிர் காப்பாற்றப்படவும் நீ என் சகோதரி எனச் சொல்லி விடு″ என்றார். 14 ஆபிராம் எகிப்தைச் சென்றடைந்தபொழுது, சாராய் மிகவும் அழகானவராக இருப்பதை எகிப்தியர் கண்டனர். 15 பார்வோனின் மேலதிகாரிகள் அவரைக் கண்டு அவரைப்பற்றிப் புகழ்ந்தனர். ஆகவே, அவர் பார்வோனின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 16 அவர் பொருட்டு ஆபிராமுக்குப் பார்வோன் நன்மை செய்தான்: ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் அவருக்குக் கொடுத்தான்.17 ஆனால் ஆண்டவர் ஆபிராமின் மனைவி சாராய்க்கு நேரிட்டதை முன்னிட்டுப் பார்வோனையும் அவன் குடும்பத்தாரையும் கொடிய கொள்ளை நோய்களால் துன்பப்படுத்தினார். 18 பார்வோன் ஆபிராமை அழைத்து அவரிடம், ″நீ எனக்கு இப்படிச் செய்து விட்டாயே! அவள் உன் மனைவி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை? 19 அவள் உன் சகோதரி என்று நீ ஏன் சொன்னாய்? அதனால்தான் நான் அவளை என் மனைவியாக எடுத்துக் கொண்டேன்! இப்பொழுதே, உன் மனைவியைக் கூட்டிக்கொண்டு புறப்படு″ என்றான். 20 பின் பார்வோன் தன் ஆள்களுக்குக் கட்டளையிட அவர்கள் அவரை அவர் மனைவியுடனும் அவருக்குரிய எல்லாவற்றுடனும் அனுப்பிவிட்டனர். 


 கிறிஸ்தவர்களை புதைக்காமல் எரிக்கலாமா?





ஒரு பரிசுத்தவான் இறந்தபின்பு அவருடைய சரீரத்தை புதைப்பதாலோ எரிப்பதாலோ அவருடைய ஆத்துமாவிற்கு கிடைக்கும் நித்திய ஆசீர்வாதங்களில் எந்த மாற்றமும் வராது. அவர்கள் எல்லாரும் பரலோகத்தில் பத்திரமாகத்தான் இருக்கின்றனர்.

நாம் எப்படி ஒரு வீட்டிலிருந்து வெளியே செல்கிறோமோ அப்படித்தான் நாம் இறப்பதும். வீடு என்பது நாம் இருக்கும் இடம். வெளியேபோனாலும் நாம் நாம்தான், வீடு நாமல்ல, அது நாம் இருந்ததற்கு அடையாளம் என்பது என்னுடைய விளக்கத்தின் ஒரு பகுதி.

சடலத்தை எரிப்பது என்பது இஸ்ரவேலர் அல்லாதவர்களின் துவக்கம். தேவனுடைய வார்த்தையாகிய பைபிளில் சுட்டெரிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டது எல்லாம் ஒரு நியாயத்தீர்ப்பு மற்றும் சாபம் என்ற விதத்தில் ஆகும். தேவனுக்கு கீழ்ப்படியாமல் போன சவுலின் சடலத்தை பெலிஸ்தியர்கள் (Philistines) எரித்தார்கள். (1 சாமு 31:12). மோவாபிலே மனுஷனுடைய எலும்புகள் எரிக்கப்பட்டது மிகவும் கொடூரமான குற்றம் ஆகும். (ஆமோஸ் 2:1,2).

வேசிகள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்று அறிவோம். (ஆதி 38:24, லேவி 21:9) ஆகான் என்பவன் சாபத்தீடானவைகளை எடுத்துக்கொண்டு போய் அவனும் இறுதியில் எரிக்கப்பட்டான். பொல்லாத ராணியாகிய யெசேபேல் கொல்லப்பட்டபோது, அவளைப் புதைக்க யாரும் இல்லை.

பழைய ஏற்பாட்டில் "நீ சமாதானத்தோடே உன் பிதாக்களின் கல்லறையில் சேர்க்கப்படுவாய்" என்று தேவன் சொன்னது ஒரு விசேஷமான ஆசீர்வாதமாக எண்ணப்பட்டது. (II நாளா 34:27,28).

I கொரி 15ம் அதிகாரத்தில் பவுல் ஏன் ஒரு கிறிஸ்தவன் அடக்கம்பண்ணப்படுகிறான் என்றும் உயிர்த்தெழுதலின் நிச்சயத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

புதிய ஏற்பாட்டிலும் இரத்தசாட்சியாய் மரித்த யோவான் ஸ்நானகன், ஸ்தேவான் என்பவர்கள் அடக்கம் பண்ணப்பட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவானவர் வேதவாக்கியத்தின்படியே அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்று வாசிக்கிறோம்.

கிறிஸ்துவின் மரணத்தில் அவருக்கு செய்யப்பட்டதைவிட வேறு சிறந்த உதாரணம் இல்லை. பைபிளில் வாசிக்கும்போது சபிக்கப்பட்டவர்கள் எல்லாம் எரிக்கப்பட்டார்கள். எனவே எரிக்காமல் புதைக்கும்படி உங்களுக்கு அறிவுரை சொல்கிறேன்.

-----------------------------
சிந்தனைக்கு:

இந்த காலத்திலும் (கி.பி 1990-2010) மரித்து பின்பு உயிர்திரும்பி வந்தவர்கள் பொதுவாக சொல்லுவது என்னவெனில் எனக்கு திரும்பி இந்தபூமிக்கு வர இஷ்டமே இல்லை. இந்த சரீரத்தை விட்டு சென்றபின்பும் நான் நானாகத்தான் இருந்தேன் இந்த பூமியில் நடந்தவை ஞாபகங்கள் இருக்கின்றன. ஒளியை நோக்கி பிரயாணம் செய்தேன் அதில் தேவன் வாசம்பண்ணினார். பரலோகம் என்பது வருணிக்கமுடியாத அளவுக்கு அருமையாக உள்ளது. குருடனுக்கு சிவப்பு, நீலம்,பச்சை என்பதை எப்படி விளக்குவது கடினமோ அப்படித்தான் அங்கே பரலோகத்தில் பார்த்த உணர்ந்த அனுபவமும் விளக்குவது கடினம் என்று சொல்கின்றனர்.

கீழே ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானியாயிருந்தவர் (George Rodaniah) 1976-ல் வேண்டுமென்றே கார் மோதி கொல்லப்பட்டார். அவர் சரீரம் எரிக்கப்படவில்லை. மருத்துவமனையில் குளிர்-சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. மூன்று நாள் கழித்து உயிர் வந்தது. பின்பு அமெரிக்கா சென்றுBayTown, Texas-ல் ஒரு போதகராக மாறிவிட்டார். அவருடைய சாட்சியை இங்கே படிக்கலாம் (George Rodania's Testimony). கடந்த அக்டோபர் 12, 2004ல் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

இவருடைய சாட்சியை நான் எப்பொழுது படித்தாலும்/பார்த்தாலும், என் மனதில் ஓடும் எண்ணங்கள் பல. உங்களையும் சிந்திக்கவைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

டிஸ்கவரி சேனலில் (Discovery Channel) அந்த உண்மைச் சம்பவம் உங்களுக்கு இங்கே சான்றாக: 





இன்றும் சில தேவனுடைய பிள்ளைகள் இறந்தபின்பு உயிரடைந்திருக்கின்றனர். YouTube-ல் தேடுங்கள் மரித்தபின்பு தேவனைச் சந்தித்த மயிர்சிலுக்கும் சம்பவங்கள் காணலாம். அநேக வீடியோக்கள் இருப்பினும் இது டிஸ்கவரி சேனலில் வந்ததால் இங்கே ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது. என்னதான் மரித்தபின் உயிரடைந்தவர்கள் வந்து சொன்னாலும் இயேசு சொன்னதுபோல் சந்தேகப்படும் சந்தேகவாதிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

மனிதன் மரித்தபின்பு ஒன்றுமில்லாமல் போகிறான் என்று சொல்பவர்கள் இந்த வீடியோவைப் பார்த்த பிறகாவது சற்றே சிந்திக்கட்டும். இன்று மரித்தால் எங்கு போவாய்? பரலோகத்திற்கா, நரகத்திற்கா? தெரியவில்லையெனில் இயேசுவிடம் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். ஏனெனில் அவரே பாவங்களை மன்னிக்கும் அதிகாரமுள்ள தேவன். இயேசு: என்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு இந்த உலகிற்கு வந்து மனுஷருடைய பாவங்களுக்காக சிலுவையிலே மரித்தேன், இதோ சதா காலமும் உயிரோடிருக்கிறேன் என்று சொன்னார். உங்களுக்கு பரலோகத்துக்குச் செல்லும் நம்பிக்கையையும் நிச்சயத்தையும் அவர் தருவார்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

தொடக்கநூல் (ஆதியாகமம்)

அதிகாரம் 11


பாபேல் கோபுரம்
1 அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. 2 மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர். 3 அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, ″வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்″ என்றனர். அவர்கள் செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர். 4 பின், அவர்கள் ″வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்″ என்றனர். 5 மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார். 6 அப்பொழுது ஆண்டவர், ″இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது. 7 வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்″ என்றார். 8 ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர். 9 ஆகவே அது ″பாபேல்″ என்று வழங்கப்பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார்.

சேமின் வழிமரபினர்
10 சேமின் தலைமுறைகள் இவையே: வெள்ளப் பெருக்கிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பின் சேம் நூறு வயதாக இருந்தபொழுது அவனுக்கு அர்பகசாது பிறந்தான். 11 அர்பகசாது பிறந்தபின் சேம் ஐந்நூறு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது சேமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 12 அர்பகசாது முப்பத்தைந்து வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செலாகு பிறந்தான். 13 செலாகு பிறந்த பின் அர்பகசாது நானூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது அர்பகசாதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 14 செலாகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஏபேர் பிறந்தான். 15 ஏபேர் பிறந்தபின் செலாகு நானூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது செலாகிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 16 ஏபேர் முப்பத்து நான்கு வயதாக இருந்தபொழுது அவனுக்குப் பெலேகு பிறந்தான். 17 பெலேகு பிறந்தபின் ஏபேர் நானூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது ஏபேருக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 18 பெலேகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு இரயு பிறந்தான். 19 இரயு பிறந்தபின் பெலேகு இருநூற்று ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது பெலேகிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 20 இரயு முப்பத்திரண்டு வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செரூகு பிறந்தான். 21 செரூகு பிறந்தபின் இரயு இருநூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது இரயுவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 22 செரூகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு நாகோர் பிறந்தான். 23 நாகோர் பிறந்தபின் செரூகு இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது செரூகுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 24 நாகோர் இருபத்தொன்பது வயதாக இருந்தபொழுது அவனுக்குத் தெராகு பிறந்தான். 25 தெராகு பிறந்தபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது நாகோருக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். 26 தெராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர்.

தெராகின் வழிமரபினர்
27 தெராகின் தலைமுறைகள் இவையே: தெராகிற்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர். ஆரானுக்கு லோத்து பிறந்தான். 28 ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான். 29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான். 30 சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார். 31 தெராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர். 32 தெராகு இருநூற்று ஐந்து வயதாக இருந்தபொழுது காரானில் இறந்தார்.
தொடக்கநூல் (ஆதியாகமம்)

அதிகாரம் 10

நோவா புதல்வரின் வழிமரபினர் (1குறி 1:5-23)
1 நோவாவின் புதல்வர் சேம், காம், எப்பேத்து ஆகியோரின் வழிமரபினர் இவர்களே. வெள்ளப் பெருக்குக்குப்பின் அவர்களுக்குப் புதல்வர் பிறந்தனர். 2 எப்பேத்தின் புதல்வர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மெசேக்கு, தீராசு. 3 கோமேரின் புதல்வர்: அஸ்கனாசு, இரிபாத்து, தோகர்மா. 4 யாவானின் புதல்வர்: எலிசா, தர்சீசு, கித்திம், தோதானிம். 5 இவர்கள் வழிவந்த கடற்கரை நாட்டினர் மொழி, குடும்ப, இனவாரியாகப் பிரிந்து தம் நாடுகளில் பரவினர். 6 காமின் புதல்வர்: கூசு, எகிப்து, பூற்று, கானான். 7 கூசின் புதல்வர்: செபா, அவிலா, சப்தா, இராமா, சப்தக்கா. இராமாவின் புதல்வர்: சேபா, தெதான். 8 மேலும் கூசுக்கு நிம்ரோது பிறந்தான். இவன்தான் முதன்முதலாக உலகத்தில் பேராற்றல் கொண்டவனாக விளங்கியவன். 9 ஆண்டவர் திருமுன் இவன் ஆற்றல்மிக்க வேடனாக இருந்தான். இதனால் ″ஆண்டவர் திருமுன் நிம்ரோதைப் போன்ற ஆற்றல்மிக்க வேடன்″ என்ற வழக்கு ஏற்படலாயிற்று. 10 முதன்முதலில் சினயார் நாட்டிலிருந்த பாபேல், எரேக்கு, அக்காது, கல்னே ஆகியவை அவன் ஆட்சிக்குள் வந்தன. 11 அந்நாட்டிலிருந்து அசீரியா நாட்டுக்குச் சென்று, அங்கே நினிவே, இரகபோத்து, ஈர், காலாகு ஆகிய நகரங்களை அமைத்தான். 12 நினிவேக்கும் காலாகிற்கும் இடையே மிகப்பெரிய நகரமாகிய இரசேனை அவன் நிறுவினான். 13 எகிப்தின் புதல்வர்: லூதிம், அனாமிம், இலகாபிம், நப்துகிம், 14 பத்ருசிம், பெலிஸ்தியரின் மூதாதையரான கஸ்லுகிம், கப்தோரிம். 15 கானானின் தலைமகன் சீதோன், ஏனைய புதல்வர்: ஏத்து, 16 எபுசி, எமோரி, கிர்காசி, 17 இவ்வி, அற்கி, சீனி, 18 அர்வாது, செமாரி, அமாத்தி. இந்தக் கானானின் குடும்பங்கள் பின்னர் பிரிந்து பரவலாயின. 19 கானானியர் நாட்டு எல்லை சீதோனிலிருந்து தெற்கே கெரார் செல்லும் திசையில் காஸாவரையும் கிழக்கில் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் செல்லும் திசையில் இலாசா வரையும் பரவியிருந்தது. 20 இவை காம் புதல்வரின் குடும்ப, மொழி, நாடு, இனவாரியான பிரிவுகள். 21 எப்பேத்தின் மூத்த சகோதரன் சேமுக்குப் புதல்வர் பிறந்தனர். சேம் ஏபேரியரின் முதுபெருந்தந்தை. 22 சேமின் ஏனைய புதல்வர்: ஏலாம், அசீரியா, அர்பகசாது, லூது, ஆராம். 23 ஆராமின் புதல்வர்: ஊசு, ஊல், கெத்தெர், மாசு. 24 அர்பகசாதுக்குச் செலாகு பிறந்தான். செலாகிற்கு ஏபேர் பிறந்தான். 25 ஏபேருக்கு புதல்வர் இருவர் பிறந்தனர்; ஒருவனின் பெயர் பெலேக்கு. ஏனெனில், அவன் காலத்தில்தான் உலக மக்கள் பிரிந்தனர். அவன் சகோதரனின் பெயர் யோக்தான். 26 யோக்தானின் புதல்வர்: அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு, 27 அதோராம், ஊசால், திக்லா, 28 ஓபால், அபிமாவேல், சேபா, 29 ஓபீர், அவிலா, யோபாபு. 30 அவர்கள் வாழ்ந்த நாடு மேசாவிலிருந்து கிழக்கே செப்பார் செல்லும் திசையில் இருந்த மலைநாடுவரை பரவியிருந்தது. 31 இவை சேம் புதல்வரின் குடும்ப, மொழி, நாட்டு, இனவாரியான பிரிவுகள். 32 இவை நோவா புதல்வரின் வழிவந்த குடும்பங்களின் இனவாரியான தலைமுறைகள்.இவர்கள் வழிவந்த மக்களினங்களே வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகின் எல்லா நாடுகளிலும் பரவின.